Anna University Updates Exclusively Provided by Www.MaplaBench.in
10 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தம்!
மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2020 – 2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, அங்கீகாரம் தொடர்பான அனுமதி நீட்டிப்புக்கு தமிழகம் முழுவதும் உள்ள 519 பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கு 509 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கால அவகாசம் முடிவுற்ற நிலையில், 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்காத காரணத்தால் அந்த கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைக்க விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 – 2020-ம் கல்வியாண்டில், 519 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்களில் 82 ஆயிரத்து 819 இடங்கள் மட்டுமே நிரம்பியதும், இதே ஆண்டில் 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முற்றிலும் நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Anna University Revaluation Results 2020 Updates
Anna University April May 2020 Examination Schedule Announced
Anna University April/May 2020 Examinations (Even Semester)
Anna University Last Working Day for December 2019 May 2020 Even Semester : Last Working Day
Please Type “MaplaBench Updates” in Google for More Updates.