பி.இ., பட்டம் பெற்ற மாணவர்களில், ’94 சதவீதம் பேர், அப்பட்டத்தை பெற தகுதியே இல்லாதோர்’
உலக தர வரிசை பல்கலை பட்டியலில், எதிரி நாடான, சீனா கூட, முதல், 10 இடங்களில் இருக்கிறது. இந்திய பல்கலைக் கழகங்களோ, 200 இடங்களுக்கு அப்பால் தான் உள்ளன; இது, கல்வியாளர்கள், அரசியல்வாதிகளின் காதில், இன்று வரை, விழவில்லையே! ‘நாட்டில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பயின்று, பி.இ., பட்டம் பெற்ற மாணவர்களில், 94 சதவீதம் பேர், அப்பட்டத்தை பெற தகுதியே இல்லாதோர்’ என, சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது; இது, எவ்வளவு கேவலமானது.தமிழகத்தில், திராவிட கட்சிகளின், 50 ஆண்டு கால ஆட்சியில், எல்லா துறைகளிலும், லஞ்சம் என்ற புற்றுநோய் பரவி யுள்ளது; அது, கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை.பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கட் – ஆப் முறையில், பொறியியல் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலையில், மாணவர் சேர வேண்டுமெனில், 1,150 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிபுத்திசாலியான மாணவனால், ஏன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை?அந்த மாணவன், ‘ஈ அடிச்சான் காப்பி’யை போல் ஒரு வரியும் பிசகாமல், கமா, முற்றுப்புள்ளியை கூட விட்டு விடாமல், கடம் அடித்திருப்பார்; இல்லாவிடில், தான் எழுதிய தேர்வு பேப்பர், எந்த ஆசிரியரிடம் செல்கிறது என்பதை, ‘சேசிங்’ செய்து, அவரை சரிகட்டி, முறைகேடாக மதிப்பெண் பெற்றிருப்பார்; இப்படி செய்திருந்தால், மாணவன் இன்ஜினியரிங் படிப்பில் எப்படி தேறுவார்!
கடந்த, 2017ல், 3.02 லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அப்போதே, அண்ணா பல்கலையில் நிர்வாக பொறுப்பாளர்கள் ஏதோ பெரிய தவறு செய்து வருகின்றனர் என்பதை, அரசு உணர்ந்திருக்க வேண்டாமா? வேலியே, பயிரை மேயும் காலம் இது; யார் தவறு செய்தாலும் பாவமன்னிப்பு உண்டு போலும்!தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், 8.86 லட்சம் மாணவர்கள் பட்டம் முடித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிட்டிவிட்டதா என, எந்த அரசியல்வாதிகளும் எண்ணியதே இல்லை. தங்கள் சம்பளத்தை, 55 ஆயிரத்தை, 1.05 லட்சமாக உயர்த்தியதற்கு, எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ந்து போயுள்ளனர்.எம்.இ., முடித்து, ஜவுளிக்கடையில், கால்கடுக்க நின்று, 8,000 ரூபாய் சம்பளத்திற்கு, 12:00 மணி நேரம் வேலை செய்வது, இவர்களுக்கு தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை!
100-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 மாணவர் கூட சேரவில்லை…!